மசூதி அருகே குண்டு வெடிப்பு... 34பேர் பலி... 130 பேர் படுகாயம்!!

 
பாகிஸ்தான்

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் 34 பேர் பலியாகியுள்ளனர். 130பேர் படுகாயம் அடைந்து கவலைக்கிடமாக உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பாகிஸ்தானை பொறுத்தவரை  பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் இயங்கி வருகின்றன.

பாகிஸ்தான்

 

இந்த இயக்கங்களை கட்டுப்படுத்த முடியாமல் தான் பாகிஸ்தான் அரசு திணறி வருகிறது. இந்த பயங்கரவாத இயக்கங்கள்  அங்குள்ள வழிபாட்டு தலங்கள், அரசியல் கட்சி கூட்டங்கள், பொது வெளிகளில் பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக வழிபாட்டு தலங்களின் மீதான  குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

வெள்ளிக்கிழமையான இன்று ஏராளமானோர் தொழுகை நடத்த சென்றிருந்த நிலையில், மசூதியில் அருகில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து இருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.   இதில் 34 பேர் உயிரிழந்தனர் மற்றும் 130 பேர் காயமடைந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈத்-இ-மிலாத்-உன்-நபி பெருநாள் ஊர்வலத்திற்காக மக்கள் கூடியிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்
படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.   தேவைப்பட்டால், அவர்கள் கராச்சி மருத்துவமனைக்கு மாற்றப்படுவர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முழுப் பொறுப்பையும் அரசு ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் மாதத்தில் நடந்த 2 வது பெரிய குண்டுவெடிப்பு என தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர்  மாத தொடக்கத்தில், ஒரு குண்டுவெடிப்பில் ஜமியத் உலமா-இ-இஸ்லாம் ஃபஸ்ல் (JUI-F) தலைவர் ஹபீஸ் ஹம்துல்லா உட்பட பலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web