இளையராஜா அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல்... சென்னையில் அடுத்தடுத்து பரபரப்பு!

 
இளையராஜா வெடிகுண்டு

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி, நேற்று டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த மின்னஞ்சல் கிடைத்ததும் அதிர்ச்சியடைந்த டிஜிபி அலுவலகம் உடனடியாக மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர் குழுவை இளையராஜாவின் அலுவலகத்துக்கு அனுப்பியது. அங்கு அனைத்து அறைகளும், வாகன நிறுத்துமிடங்களும், அலுவலக வளாகமும் முழுமையாக சோதனை செய்யப்பட்டன.

வெடிகுண்டு மிரட்டல் நீதிமன்ற வளாகம்

சில மணி நேரம் நீடித்த தேடுதலின் பின்னர் எந்தவித வெடிகுண்டும் எங்கும் கிடைக்கவில்லை. இதனால் அந்த மின்னஞ்சல் வெறும் மிரட்டல் மெயிலாகும் என உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் இளையராஜாவின் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

வெடிகுண்டு மிரட்டல்

சமீபகாலமாக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடு, அலுவலகங்களை குறிவைத்து இத்தகைய வெடிகுண்டு மிரட்டல்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பே முதல்வர் ஸ்டாலின் இல்லம், நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, விஜய் உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் இது போன்ற மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தன.

அதனையடுத்து விசாரணையில் பல மிரட்டல்கள் புரளியாகவும், சிலவற்றில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதுமான தகவலும் வெளியாகியுள்ளது. இளையராஜா அலுவலகத்துக்கு வந்த சமீபத்திய மிரட்டலும் அதே வரிசையில் புரளியாக முடிவடைந்துள்ளது.அதே போன்று நேற்று சென்னை மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?