முதல்வர் ஸ்டாலின், நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்... சென்னையில் பரபரப்பு!
சென்னையில் முதல்வர் ஸ்டாலின், நடிகை த்ரிஷா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அரசு அலுவலகங்கள், பொது இடங்கள், அரசியல்வாதிகளின் வீடுகள், திரை பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. தீவிர சோதனைக்கு பிறகு அது புரளி என்பதும் தெரிய வருகிறது.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷா வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அத்துடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு மற்றும் ஆளுநர் மாளிகைக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னை தேனாம்பேட்டை செனடாப் சாலையில் தான் நடிகை த்ரிஷாவின் வீடும், முதல்வர் ஸ்டாலின் வீடும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக நடிகரும் தவெக தலைவருமான விஜய் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
