சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பெரும் பரபரப்பு!

 
வெடிகுண்டு

சென்னையில்  மயிலாப்பூரில் செயல்பட்டு வரும்  தனியார்   பள்ளிகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உடனடியாக பள்ளி நிர்வாகிகள் அதனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவம் குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

பள்ளி

பின்னர், குண்டு நாய், குண்டு நீக்கப்படை மற்றும் துரிதப்படை வீரர்கள் பள்ளி வளாகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். தற்போது எந்த இடத்திலும் வெடிகுண்டு இருப்பது உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், போலீசார் மின்னஞ்சல் வந்த மூலத்தை கண்டறிவதற்காக சைபர் குற்றப்பிரிவு மூலமாக விசாரணை தொடங்கியுள்ளனர்.

காவல்

இந்த மிரட்டல் மின்னஞ்சல் காரணமாக சென்னை முழுவதும் பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை பள்ளி வளாகங்களில் நுழைவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?