உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ... பெரும் பரபரப்பு!
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் ஜெய்ப்பூர் அமர்வுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது. மர்ம நபர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சல் மூலம் நீதிமன்ற கட்டடத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறப்பட்டதால், உடனடியாக பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் விரைவாக வெளியேற்றப்பட்டனர்.

நாய் படை, வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் இணைந்து வளாகம் முழுவதும் விரிவான சோதனை நடத்தின. மின்னஞ்சல் அனுப்பியவரின் ஐபி முகவரியைத் தடயவியல் நிபுணர்கள் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே மக்கள் திரண்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீஸார் அந்தப் பகுதியை முழுமையாக முற்றுகையிட்டனர்.

காவல் துணை ஆணையர் ராஜர்ஷி ராஜ் தெரிவித்ததாவது, “நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தற்போது யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தீயணைப்புப் படை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழுக்கள் அறைக்கு அறை சோதனை நடத்தி வருகின்றன” என்றார். இதனையடுத்து, ஜெய்ப்பூர் நகரம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
