ஒரே நேரத்தில் விமான நிலையம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பெரும் பரபரப்பு!
கடந்த சில நாட்களாகவே இந்தியா முழுவதும் விமான நிலையங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருவதோடு பெற்றோர்களும், மாணவ, மாணவியர்களும் பீதி அடைகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள விமான நிலையங்கள், பள்ளிகள், நிறுவனங்கள் என 300க்கும் மேற்பட்ட இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் விரைந்து வந்தனர். இதற்கு முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடைபெற்றது. ஆனால் சந்தேகத்துக்குரிய பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், வெடிகுண்டு மிரட்டலால் அந்தப் பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
