தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்...தலைநகரில் பரபரப்பு... !

 
வெடிகுண்டு மிரட்டல்

சென்னை பாரிசில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி   செயின்ட் மேரிஸ் பள்ளி; பூந்தமல்லியில் உள்ள தனியார் பள்ளி; பெரம்பூர், எழும்பூர், சாந்தோம் பகுதிகளில் செயல்பட்டு வரும்  தனியார் மேல்நிலைப்பள்ளிகள்; அத்துடன்  கோபாலபுரம் செட்டிநாடு வித்தியாஸ்ரமம் ஆகிய  பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் மின்னஞ்சல் மூலம் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.  அத்துடன்  மேலும் சில பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.  

பெற்றோர்கள்

இதனையடுத்த அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  மர்ம நபர் ஒருவர் ஒரே நேரத்தில் அனைத்து  பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்திருந்தது, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர் இடையே பெரும்  அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அத்துடன்  மாணவர்களை பள்ளி நிர்வாகம் பத்திரமாக பெற்றோருடன் அனுப்பி வைக்கத் தொடங்கியது.

போலீஸ்


இதுகுறித்து  தகவல் தெரிந்ததும்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  காவல்துறையினர்  மோப்பநாய்களின் உதவியுடன் அண்ணா நகர், ஜே.ஜே நகர் என வெடிகுண்டு மிரட்டல் வந்த பகுதிகளில் செயல்படும் பள்ளிகளில் சோதனை நடத்தப்பட்டது.  சோதனையின் முடிவில் இது வெறும் புரளி என தெரியவந்ததை அடுத்து, மக்கள் பீதியடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது.   வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமியை காவல்துறையினர்   தேடிவருகின்றனர். இந்நிலையில் இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதில் சென்னை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web