18 நாட்களாக நடைபெற்ற புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு!!
சென்னையில் பிப்ரவரி 16ம் தேதி முதல் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 45 வது ஆண்டாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

முதல்வர்.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த கண்காட்சியில் 800 அரங்குகளில், 10 லட்சம் தலைப்புகளிலான புத்தகங்கள் பார்வையாளர்களை கவரும் வகையில் அடுக்கப்பட்டிருந்தன. கடந்த 18 நாட்களாக காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஆசியாவிலேயே நடைபெற்ற மிகப்பெரிய புத்தக கண்காட்சி என்ற சிறப்பை பெற்றுள்ளது. இந்த புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இதுவரை, 12 லட்சத்துக்கும் அதிகமான வாசகர்கள் புத்தக கண்காட்சிக்கு வருகை தந்துள்ளனர். இன்று நடைபெற உள்ள நிறைவு விழாவில் 25 ஆண்டுகள் பதிப்பகத் துறையில் பணியாற்றியவர்களுக்கும், சென்னை புத்தக கண்காட்சி நடைபெற உறுதுணையாக இருந்தவர்களுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துரைகளும் வழங்கப்பட உள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க...
சனிக்கிழமைகளில் இதை தானம் செய்து பாருங்க! அதுக்கப்புறமா வாழ்க்கையில் எப்பவுமே வெற்றி தான்!
வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்க இதனை மட்டும் செய்து பாருங்க!!
திருமண வரவேற்பில் மணமகள் கலக்கல் டான்ஸ்! மணமகன் அடித்ததால் மாப்பிள்ளையை மாற்றிய மணப்பெண்!!
