முன்பதிவு குறைவு... 6 சிறப்பு ரயில்கள் ரத்து... தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள் திரும்புவதற்காக தெற்கு ரெயில்வே பல சிறப்பு ரெயில்களை இயக்கியுள்ளது. ஆனால் முன்பதிவு குறைவாக இருப்பதால், 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை இயக்கப்படவிருந்த 6 சிறப்பு ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதில் முக்கியமாக, 22-ந்தேதி மதியம் 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் இருந்து கோட்டயம் செல்லும் சிறப்பு ரெயில் (06121) ரத்து.
23-ந்தேதி மதியம் 2.05 மணிக்கு கோட்டயம் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரெயில் (06122) ரத்து.\
24 மற்றும் 26-ந்தேதி செங்கல்பட்டு இருந்து திருநெல்வேலி செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06153) ரத்து.
24 மற்றும் 26-ந்தேதி திருநெல்வேலி இருந்து செங்கல்பட்டு செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06154) ரத்து.
28-ந்தேதி காலை 9.15 மணிக்கு நாகர்கோவில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரெயில் (06054) ரத்து.
29-ந்தேதி அதிகாலை 4.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06053) ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்புடைய பயணிகள் மாற்று முன்பதிவு செய்து, பயணத் திட்டத்தை அவசரமாக புதுப்பிக்க வேண்டியுள்ளது என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
