இன்று திருப்பதியில் பிரம்மோற்சவம் கோலாகலத் தொடக்கம்.... குவிந்த 2 லட்சம் பக்தர்கள்!!

 
இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

திருமலை திருப்பதியில் வருடத்தின் எல்லா நாட்களும்  விழாக்கள் தான் . உற்சவங்கள் தான். இருந்தாலும் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  9  நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி காலை மற்றும் மாலையில் விதவிதமான வாகனங்களில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

உலகப்பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம்  இன்று செப்டம்பர்  18ம் தேதி தொடங்க உள்ளது.இந்த விழா  செப்டம்பர் 26ம் தேதி வரை நடைபெறும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.   இன்று நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொள்கிறார்.
திருப்பதியில் ஒவ்வொரு ஆண்டும்  புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

திருப்பதி திருமலை பெருமாள்

சாதாரண நாட்களிலேயே பெருமாளைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதிலும் புரட்டாசியில் ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தை காண உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இந்நாட்களில் தினசரி    ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள்.
 மொத்தம் 9  நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி காலை மற்றும் மாலையில் விதவிதமான வாகனங்களில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

திருப்பதி


 நடப்பாண்டை பொறுத்தவரை இன்று  செப்டம்பர் 18 முதல் 26 வரை பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளும் வகையில் 4  மாடவீதிகளில் 2 லட்சம் பக்தர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரம்மோற்சவத்தின் முதல் நாளில் மாநில அரசின் சார்பில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டு திருப்பதி ஏழுமலையானுக்கு   பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web