அதிர்ச்சி... பிரபல மல்யுத்த வீரர் மாரடைப்பால் காலமானார்!!

 
பிரேவியாட்

பிரபல மல்யுத்த வீரர் பிரேவியாட் காலமானார். இவருக்கு வயது 36. இவர்  1987  ஃப்ளோரிடாவில் பிறந்தவர். இவருடைய  இயற்பெயர் விண்தம் லாரன்ஸ் ரொட்டெண்டா. இவருடைய தாத்தாவும், தந்தையும் மிகப்பெரிய மல்யுத்த வீரர்கள்.   இவருடைய மாமாவும், சகோதரர்களும் மல்யுத்த வீரர்களே.   2009 ல்  மல்யுத்த பொழுதுபோக்கு நிறுவனமான WWE வில் ப்ரே வியாட் இணைந்து கடும்பயிற்சிகளை  மேற்கொண்டார்.  


3 முறை WWE உலக சாம்பியன் பட்டத்தையும்  2 முறை யுனிவர்சல் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி சாதனை படைத்தார்.  ஸ்மாக்டவுன் மற்றும் ரா போன்ற பொழுதுப் போக்கு மல்யுத்த தொடரில் Tag team சாம்பியன் பட்டங்களையும் கைப்பற்றி ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.   2021 ல்  WWE வில் இருந்து விலகிய ப்ரே வியாட் மீண்டும் அக்டோபர்  2022ல்   திரும்பினார்.  2023 ல் ராயல் ரம்பிள் தொடரில் பங்கேற்றார். இந்நிலையில் 36 வயதில் திடீர் மாரடைப்பு  காரணமாக உயிரிழந்தார்.  இந்த தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ள WWE நிறுவன தலைமை செயல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.


அதில் ” ப்ரே வியாட்டின் மரணம் அதிர்ச்சி அளிப்பதாகவும் இந்த இக்கட்டான நேரத்தில் அவருடைய குடும்பத்திற்கு துணை நிற்கிறோம்” எனவும் பதிவிட்டுள்ளார்.   ப்ரே வியாட்டின் மரணத்திற்கு சக விளையாட்டு வீரர்கள், உறவினர்கள்,நண்பர்கள், ரசிகர்கள் பலரும்  இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.  ப்ரே வியாட்டின் கடந்த சில நாட்களுக்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ”  யார் மீது பிரியமாக இருக்கிறீர்களோ, அவர்களை கடைசிவரை பாசமாக பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள் ” எனக் கூறியிருந்தார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web