வீட்டின் கதவை உடைத்து தங்க நகை திருட்டு... மர்ம நபர்கள் கைவரிசை!
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து தங்க நகையை திருடிய மர்ம நபர்கள், சிசிடிவி ஹார்ட் டிஸ்கையும் எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி கே.டி.சி., நகர், இ.பி., காலனியைச் சேர்ந்தவர் அல்பட்ரோஸ் மகன் இக்னேஷியஸ் நோபல் (46), இவர் கடந்த 24ம் தேதி மாலை தனது உறவினர் வீட்டு திருமண விழாவிற்காக தேனி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். பின்னர் இன்று காலை அதிகாலை 2:30 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் அதிலிருந்த 1¾ பவுன் நகை திருடு போயிருந்தது. மேலும், வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்ததால் கேமிராவின் ஸ்டோரேஜ் பகுதியான Hard diskயை மர்ம நபர்கள் திருச் சென்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்து இக்னேஷியஸ் நோபல் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சைரஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
