வீடு புகுந்து பெண்ணிடம் சில்மிஷம்... அழகில் மயங்கி திருட வந்ததை மறந்த கொள்ளையன்!

 
சில்மிஷம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், கொள்ளையடிக்க சென்ற இடத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணைப் பார்த்ததும், அழகில் மயங்கி, திருட சென்றதை மறந்து இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த கொள்ளையனை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் இரவு வேலைக்கு சென்றிருந்த நிலையில், 30 வயதுடைய அவரது மனைவி மட்டும் தனியாக தூங்கி கொண்டு இருந்துள்ளார். அப்போது அதிகாலையில் கொள்ளையன் ஒருவன், வீட்டின் மேல்மாடி கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அறையில் இருந்த பீரோவை திறந்து பணம், நகைகள் ஏதாவது இருக்கிறதா? என பார்த்தார். விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் சிக்காததால் ஏமாற்றமடைந்த கொள்ளையன், தொடர்ந்து மற்றொரு அறையில் நுழைந்த போது, இளம்பெண் கட்டிலில் தூங்கி கொண்டிருந்தைப் பார்த்துள்ளான்.

காரில் வழிப்பறி கொள்ளை!! மக்களே உஷார்!! இப்படியும் நடக்கலாம்!!

இளம்பெண்ணின் அழகில் மயங்கியவன், தான் கொள்ளையடிக்க வந்ததை மறந்து பெண் மீது சபலம் கொண்டு, தான் கொண்டு சென்றிருந்த கத்தரிக்கோலால் இளம்பெண்ணின் நைட்டியை வெட்டி எடுத்து சில்மிஷம் செய்துள்ளான். இதனால் பெண் திடீரென கண்விழித்த நிலையில், உடனடியாக கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றுள்ளான். இதில் ‘திருடன்... திருடன்...’ என இளம்பெண் கத்தி கூச்சலிட்டதும், உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடினான்.

இளம்பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டு, தப்பியோடிய கொள்ளையனை துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால், வேகமாக ஓடி தப்பி சென்றுவிட்டான். இது குறித்து குளச்சல் காவல் நிலையத்துக்கு செல்போன் மூலம் இளம்பெண் தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதியில் தேடிப் பார்த்து, குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த வாலிபரை மடக்கி பிடித்து, காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

நகை

போலீசாரின் விசாரணையில் அவர் கீழமுட்டம் பகுதியைச் சேர்ந்த சகாயஜோஸ்(24) என்பது தெரிய வந்தது. இவர் பெண்ணின் வீட்டில் கொள்ளையடிக்க சென்ற நிலையில், இளம்பெண்ணின் அழகில் மயங்கி சில்மிஷம் செய்ததை ஒத்துக் கொண்டார். இது குறித்து அவர் போலீசாரிடம் கூறும்போது, ‘நான் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தேன். அத்துடன் குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக ஆசைப்பட்டு திருட்டு தொழிலில் ஈடுபட்டேன். சம்பவத்தன்று பெண்ணின் வீட்டை நோட்ட மிட்ட போது வீட்டின் முன் ஆண்கள் அணியும் செருப்பு இல்லாததை கண்டேன். இதனால் வீட்டில் அவரது கணவர் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு மாடி கதவின் பூட்டை கடப்பாறை கம்பியால் உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்றேன். ஆனால் நகையோ, பணமோ கிடைக்கவில்லை. அப்போது அடுத்த அறையில் பெண் தூங்கி கொண்டிருந்ததைப் பார்த்து, சபல புத்தியால் சில்மிஷம் செய்தேன். அவர் கண் விழித்ததும் தப்பியோடி குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்தேன். ஆனால் போலீசார் என்னை தேடி கண்டுபிடித்தனர்’ என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாயஜோஸை கைது செய்தனர். தொடர்ந்து அவரை இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சகாயஜோஸ் மீது மணவாளக்குறிச்சி, வெள்ளிச்சந்தை காவல் நிலையங்களில் 8 திருட்டு வழக்குகளும், குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் 2 போக்சோ வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?