இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு... பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு!

 
இங்கிலாந்து சார்லஸ்

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.  இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் ஏற்கெனவே  புரோஸ்டேட் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லண்டன் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தனது புரோஸ்டேட் சிகிச்சை  குறித்தும் மன்னர் சார்லஸ் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

சார்லஸ்

இந்தநிலையில் தற்போது அவருக்கு இன்னொரு வகை புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய சிகிச்சையின்போது தான் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த வகை புற்றுநோய் என்பது  குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.  ஆனால் நேற்று முதல் அவர் வழக்கமான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள உள்ளார் என்று அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'மன்னர் சார்லஸ் தனது சிகிச்சை குறித்து முற்றிலும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூடிய விரைவில் முழுமையான பணிக்குத் திரும்புவார்' என்றும் பக்கிங்காம் அரண்மனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.75 வயதான மன்னர் சார்லஸ் நேற்று காலை நோர்போக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாமில் இருந்து லண்டன் திரும்பினார். 

இங்கிலாந்தைப் பொறுத்தவரை 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் பேர் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாவது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தங்கள் மன்னருக்கு புற்றுநோய் என்ற செய்தி இங்கிலாந்து மக்களை கவலை கொள்ளச் செய்துள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web