எக்காரணம் கொண்டும் பிரிட்டிஷ் காலத்து ரயில்வே பங்களாக்கள் இடிக்கப்படாது ... தெற்கு ரயில்வே உறுதி!
வங்கக்கடலில் உருவான ‘மோந்தா’ புயல் இன்று (அக். 28) காலை தீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில், ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரைகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சென்னை நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில்வே பங்களாக்கள் இடிக்கப்படுகின்றன என்ற சமூக வலைதள தகவல்களுக்கு தெற்கு ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பங்களாக்கள் இடிக்கப்படாது. எந்த நோக்கத்திற்காகவும் எந்த கட்டடமும் இடிக்கப்படவில்லை” என கூறப்பட்டுள்ளது. இந்த பங்களாக்களில் பொது மேலாளர், கூடுதல் பொது மேலாளர், கோட்ட ரயில்வே மேலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் தங்கியிருப்பதாகவும் விளக்கப்பட்டுள்ளது.
ஹடோவ்ஸ் சாலையில் உள்ள காவேரி, பவானி பங்களாக்கள், ஸ்டெர்லிங் சாலையில் உள்ள கங்கோத்ரி, காயத்ரி குடியிருப்புகள் ஆகியவை மெட்ராஸ் அண்ட் சதர்ன் மஹ்ரட்டா ரயில்வே மற்றும் தென்னிந்திய ரயில்வே நிறுவனங்களால் கட்டப்பட்டவை. இவை பாரம்பரியக் கட்டிடங்களாக கருதப்படாவிட்டாலும், பாரம்பரிய முறையில் பராமரிக்கப்படுகின்றன. பழுதுபார்ப்பு பணிகள் பாரம்பரிய கட்டுமான நிபுணர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படுவதாகவும் தெற்கு ரயில்வே உறுதி அளித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
