பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் மும்பை வந்தடைந்தார்!

 
பிரிட்டன்
 

 


பிரிட்டன் பிரதமர் கியர் ஸடார்மர்  2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று காலை மும்பை வந்தடைந்தார்.லண்டனில் இருந்து பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள், தொழில் துறையினா் என 100க்கும் மேற்பட்டோருடன் விமானம் மூலம் மும்பை வந்த ஸ்டார்மரை, மகாராஷ்டிரம் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் மற்றும் மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத் ஆகியோர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.

வா்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்தும், பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்தும் மோடியும் ஸ்டார்மரும் வியாழக்கிழமை சந்திப்பின்போது ஆலோசிக்கவுள்ளார்.

அப்போது இந்தியா-பிரிட்டன் இடையேயான விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் (சிஇடிஏ), 'தொலைநோக்குத் திட்டம் 2035', தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) குறித்தும் இருவரும் விவாதிக்கவுள்ளனா்.

மும்பையில் நடைபெறும் 6வது உலகளாவிய நிதித் தொழில்நுட்ப மாநாட்டில் இருவரும் பங்கேற்று உரையாற்றுகின்றனா். 75 நாடுகளைச் சோ்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகா்கள், கல்வியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள், 7,500 நிறுவனங்கள், 800 பேச்சாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொள்கின்றனா்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?