பட்ஜெட் 2024 : விவசாயத்துறைக்கு ரூ1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு!

இன்று ஜூலை 23ம் தேதி செவ்வாய்க்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் 2024-2025 நிதியாண்டுக்கான மொத்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இன்று காலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றுள்ளார். அத்துடன் காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் ஒப்புதல் பெற்றார். அதன்படி காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த பட்ஜெட் தாக்கலில் உரையாற்றி வருகிறார். ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளது. விலைவாசி கட்டுக்குள் உள்ளது என தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் 2024 முக்கிய அறிவிப்புகள் :
இளைஞர்களுக்காக 5 சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பணவீக்கம் தொடர்ந்து குறைவாகவும், நிலையானதாகவும், 4% இலக்கை நோக்கி நகர்கிறது.
விவசாயத்துறைக்கு 1.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பணிபுரியும் பெண்களுக்கு சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
புதியதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும்.
உள்நாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் பயில 10 லட்சம் ரூபாய் வரையில் கல்வி கடன் வழங்கப்படும்.
பீகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க 26,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில மூலதன தேவையை உணர்ந்து அம்மாநிலத்திற்கு கூடுதல் ரூ15,000 கோடி ஒதுக்கப்படும்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா