தமிழக அரசின் புது முயற்சி... வாட்ஸ்அப்பில் பட்ஜெட் வெளியீடு... 2 கோடி பேர் பார்த்தனர்!

 
வாட்ஸ் அப்பில் பட்ஜெட்

 

தமிழக பட்ஜெட் அறிக்கையை தமிழக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், தலைமை செயலகத்தில் 40 கணினி அறைகள் அமைக்கப்பட்டு பட்ஜெட் தகவல்கள் உடனுக்குடன் பயனாளர்களின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலமாக சுமார்  2 கோடிக்கும் அதிகமானவர்கள் பட்ஜெட் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டனர். 
செய்தி மக்கள் தொடர்பு துறையின் இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்து, பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். 

வாட்ஸ் அப்பில் பட்ஜெட்


இந்தியாவில், முன்னோடி மாநிலமாக கடந்த காலங்களிலேயே பேப்பர் இல்லாத பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தி தமிழக அரசு, இம்முறை உடனுக்குடன் வாட்ஸ்-அப் மூலமாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செயல்படுத்தியிருந்து பலரது பாரட்டுக்களைப் பெற்றிருக்கிறது.

பட்ஜெட்


இம்மாதம் 19ம் தேதி தமிழக அரசின் 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தாக்கல் செய்தார்.  நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்களை சென்னை தலைமை செயலகத்தில் 40 கணினிகள் கொண்ட கண்காணிப்பு அறையில் , தொழில்நுட்ப பணியாளர்கள் உடனுக்குடன் வாட்ஸ்அப் செயலி மூலமாக சுமார் 2 கோடியே 8 லடசத்து 76 ஆயிரத்து 480 பேர்களுக்கு குறுச்செய்திகளாக அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web