எருமை மாட்டுக்கு 10 கிலோ தங்கத்தை பரிசாக கொடுத்த உரிமையாளர்!

 
எருமை மாடு

எருமை மாட்டுக்கு 10 கிலோ எடையில் செய்யப்பட்ட தங்கத்தினாலான சங்கிலியை பரிசாக ஒருவர் கொடுத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பார்க்க ஆச்சரியமாக இருக்கிறதா? மனிதர்களுக்கும் செல்லப் பிராணிகளுக்கும் இடையே உள்ள பந்தம் மிகவும் அழகானது, பலர் தங்கள் செல்லப்பிராணிகளை தங்கள் சொந்த குழந்தைகளாக வளர்ப்பதைப் பார்க்கிறோம். அந்த வகையில் ஒருவர் தனது வளர்ப்பு எருமைக்கு 10 கிலோ தங்கச் சங்கிலியை பரிசாக அளித்துள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டதில் இருந்து 60 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

View this post on Instagram

A post shared by King creator (@king_creator787)

இந்த வீடியோவை வட மாநிலத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பயனாளர் முஹம்மது டேனிஷ் யாகூப் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு எருமை மாடு ஒன்று இரண்டு மனிதர்களால்  சூழப்பட்டு தரையில் அமர்ந்திருப்பது போல் காட்சியளிக்கிறது, அதில் ஒருவர் சிவப்பு பெட்டியில் இருந்த 10 கிலோ தங்கச் சங்கிலியை எடுத்து எருமையின் கழுத்தில் போட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும், வீடியோவின் தலைப்பைப் படித்த பலர் அது மாடு அல்ல, எருமை மாடு என்று சுட்டிக்காட்டினர். மேலும் பலர் தங்கச் சங்கிலியை பார்த்து அதிர்ச்சியடைந்து கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web