பகீர் வீடியோ... ஆப்கன் நிலநடுக்கத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் படுகாயம்!
போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானை தற்போது இயற்கை பேரிடரும் தாக்கியுள்ளது. அந்நாட்டின் வடக்கு மாகாணமான சமங்கனில் இன்று அதிகாலை 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மஜார்-இ-ஷெரீப் நகரை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்டதால், பலர் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. வீடுகள், கட்டிடங்கள் பலத்த அதிர்வால் குலுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
CCTV footage shows the moment a strong M6.3 earthquake struck Mazar-e-Sharif, Afghanistan, a short while ago. pic.twitter.com/NX0o04Ggi5
— Weather Monitor (@WeatherMonitors) November 2, 2025
நிலநடுக்கத்தின் தாக்கம் பால்க் மற்றும் சமங்கன் மாகாணங்களில் கடுமையாக உணரப்பட்டது. இதனால் பெருமளவில் மக்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என ஆப்கானிஸ்தான் தலீபான் நிர்வாகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீட்பு மற்றும் அவசரகால உதவி குழுக்கள் உடனடியாக சம்பவ இடங்களுக்கு சென்று சிக்கியிருந்த மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) இந்த நிலநடுக்கத்துக்காக ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஆரம்ப தகவல்களின்படி, 10 பேர் உயிரிழந்ததோடு, 260க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
