அதிர்ச்சி வீடியோ... காளை மாடுகள் ஜவுளிக்கடைக்குள் நுழைந்து அட்ராசிட்டி!

 
காளைமாடு


உத்தரகாண்ட் மாநிலத்தில்  ரிஷிகேஷின் ராம்ஜூலா  பகுதியில் கடந்த சில நாட்களாக கால்நடைகள் அதிகமாக சாலைகளில் நடமாடி வருகின்றன. இதனையடுத்து சாலைகளில்  போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், பொது மக்களுக்கு காயங்கள் ஏற்படுவதாகவும் உள்ளூர் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.  ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கின்றனர்.  


இந்நிலையில்  தெருவில் நின்று சண்டை போட்ட 2 காளைகள் அப்பகுதியில் உள்ள ஜவுளி கடைக்குள் புகுந்தது. சண்டை போட்ட காளை மாடுகள் அங்கிருந்த 2 பெண்கள் மீது பாய்ந்தது. அந்த கடைக்குள் மிகவும் சிறிய பாதை இருந்ததால் அவர்களால் அங்கிருந்து தப்பித்து வெளியே செல்ல முடியவில்லை. இதனால் அவர்கள் சத்தம் போட்டனர். சத்தத்தை கேட்டு அருகில் இருந்த இளைஞர்கள் கால்நடைகளை விரட்டி விட்டனர்.

இச்சம்பவம் அந்த ஜவுளி கடையில் இருந்த சிசி டிவியில் பதிவாகியது. இதனைத்தொடர்ந்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக  பரவி வருகிறது.  நெட்டிசன்கள் இவ்வாறு திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என   கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!