விநாயகர் கோவிலில் பூட்டை உடைத்து திருட்டு... பெரும் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலுவைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில், கடந்த 18.10.2025 அன்று மர்ம நபர்கள் பூட்டை உடைத்து ரூ.20,000 மதிப்புள்ள வெண்கல மணி, கோயில் குத்துவிளக்கு மற்றும் வெண்கல தட்டு உள்ளிட்ட பூஜை பொருட்களை திருடி சென்றனர். கோவில் தர்மகர்த்தா அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.

விசாரணையின் போது, தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் கருப்பசாமி (19), கருப்பசாமி மகன் பாலவிக்னேஷ் (22), மாரிமுத்து மகன் முகேஷ் (20) ஆகியோரே இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது.

இதன்படி போலீசார் உடனடியாக மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த வெண்கல மணி, வெண்கல தட்டு, குத்துவிளக்கு போன்ற ரூ.20,000 மதிப்புள்ள பூஜை பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணை தொடர்ந்து தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் மேற்கொண்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
