அரசுப் பேருந்து , லாரியில் மோதியதில் 19 பேர் பலி, பலர் காயம்!
தெலங்கானா மாநிலத்தில் பேருந்தும் லாரியும் மோதிய பெரிய விபத்து 19 பேரின் உயிரிழப்புக்கு காரணமாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்டூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி 70 பயணிகளுடன் புறப்பட்ட அரசுப் பேருந்து, ரங்காரெட்டி மாவட்டம் மிரியால்குடா அருகே வந்தபோது ஹைதராபாத்–பிஜாபூர் தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.

மோதிய தாக்கத்தில் லாரி கவிழ்ந்ததில் அதில் இருந்த ஜல்லிக்கற்கள் பேருந்தின் மீது சரிந்தன. இதனால் பல பயணிகள் பேருந்திற்குள் சிக்கி பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பேருந்தின் முன்பகுதி முழுவதுமாக நொறுங்கியதால் மீட்புப்பணிகள் பல மணி நேரம் நடைபெற்றன.
விபத்து குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்று தேவையான அனைத்து நிவாரண நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மீட்புப் பணிகள் குறித்து தன்னிடம் தொடர்ந்து தகவல் அளிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
