ஆட்டோ மீது பேருந்து மோதி கோர விபத்து... ஒருவர் உயிரிழப்பு, பலர் படுகாயம்!

 
விபத்து

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சமுத்திராபட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் திண்டுக்கல்லில் நடைபெற்ற கணித வினாடி வினா போட்டியில் கலந்து கொள்ள ஆட்டோவில் பயணம் செய்தனர். பூதகுடியைச் சேர்ந்த சந்திரன் (53) ஓட்டிய ஆட்டோவில் மொத்தம் 12 பேர் பயணம் செய்திருந்தனர்.

ஆம்புலன்ஸ்

ஆட்டோ நத்தம் அம்மன் குளம் அருகே வந்தபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து திடீரென ஆட்டோவின் பக்கவாட்டில் மோதி பலத்த தாக்கம் ஏற்படுத்தியது. அதில் ஆட்டோ கவிழ்ந்து சாலையோரம் உருண்டது. விபத்தில் ஆட்டோவில் பயணித்த திவ்ய ஶ்ரீ (17), குகன் (14), சாருமதி (15), மவுனிகா (16), ஹரிணி ஶ்ரீ (15), ரியாராஜ் (13), பூமிகா (16), கோகிலா (17), திருப்பதி, சாகுல்ஹமீது, ஆட்டோ ஓட்டுநர் சந்திரன் உள்ளிட்டோர் பலத்த காயமடைந்தனர்.

விபத்து

காயமடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதில் மேலூர் சின்ன கற்பூரம்பட்டியைச் சேர்ந்த நைனம்மாள் (43) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலையில் கடுமையான காயம் அடைந்த திவ்ய ஶ்ரீ மற்றும் குகன் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இந்த விபத்து குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் பயணம் செய்த ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!