செம... இ சேவை மையத்தின் மூலம் பஸ்- பாஸ்!!

 
பஸ் பாஸ்

தமிழக அரசு பள்ளி, கல்லூரி பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச பேருந்து பாஸ் ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது. அதே போல்   தினசரி அலுவலகம் சென்று வேலை செய்வோர் வசதிக்காக பயணக் கட்டணச் சலுகை அனுமதிச் சீட்டுகளையும் வழங்கி வருகிறது. தினமும் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு உற்ற துணையாக இந்த சேவைக இருந்து வருகின்றன.  இதனை மாதா மாதம் புதுப்பித்துக் கொள்ள பேருந்து நிலையங்களில் இருக்கும் சேவை மையங்கள் அல்லது பணி மணைகளின் அலுவலகங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டும்.

பஸ்பாஸ்

இதனை எளிதாக பெறும் வகையில் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி  அரசு போக்குவரத்து கழகங்களில் வழங்கப்பட்டு வரும் பயணக் கட்டணச் சலுகை அனுமதிச் சீட்டுகளை ஆன்லைன் மூலம்  விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என சட்டப்பேரவையில்  போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார்.
அதன்படி இ-சேவை மையங்கள் மூலம் பஸ் பாஸ் பெறும்   வசதியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இந்த ஆன்லைன் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பஸ்பாஸ்

படிப்படியாக தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார்.  இதன்படி வீட்டின் அருகில் உள்ள இசேவை மையத்தில் அல்லது tn.e.sevai என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து  அதற்குரிய ரசீதை  பெற்றுக் கொள்ளலாம்.  இதற்கான தகவல் வாட்ஸ் அப் அல்லது குறுஞ்செய்தியாக அங்கீகரிக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும். இதன் பிறகு  பஸ் பாஸை பிளாஸ்டிக் அட்டையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் தினசரி பேருந்துகளில் பயணித்து அலுவலகம் செல்பவர்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web