அச்சச்சோ... இன்று மாலை 6 மணி முதல் பேருந்துகள் ஓடாது.. பயணிகள் அவதி!!

 
அரசுப் பேருந்து

தமிழகத்திற்கு விநாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்து விட சொல்லி கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் கர்நாடகா இதுவரை அதனை நடத்தவில்லை. பெங்களூர் விவசாயிகள் தமிழகத்திற்கு எதிர்ப்பு தர கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை அரசுக்கு தெரிவிக்கும் வகையில்  நாளை செப்டம்பர் 26ம் தேதி செவ்வாய்கிழமை  கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் கன்னட சார்பு அமைப்புகள் பெங்களூருவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்த போராட்டத்திற்கு கர்நாடகா மாநிலத்தில் பெரும்பான்மையான அமைப்பு மற்றும் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

ஆட்டோ பேருந்து


இதனையொட்டி இன்று மாலை 6 மணி முதல் தமிழகத்தில் இருந்து போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படவுள்ளன. அதாவது மாலை 6 மணி முதல் பெங்களூருக்குச் செல்லும் பேருந்துகளும் இரவு 8 மணி முதல் லாரிகளும் இயக்கப்படாது என என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் குருபுரு சாந்தகுமார்   ”கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.   குடிநீர் பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்தவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. காவிரி நதிநீர் பிரச்சினை விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மாநிலத்தின் பிரச்சினை” எனக் கூறினார். 

 

பேருந்து விபத்து
நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த பந்த் போராட்டம் மாலை 6 மணிக்கு முடிவடையும். இந்த நிலையில் தமிழர்களின் உடைமைகள் பாதிக்கப்படும் என்பதால் பெங்களூர் செல்லும் தமிழக லாரிகளை எல்லையிலேயே நிறுத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது. அந்தந்த மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள் அந்தந்த மாநில எல்லைகளில் நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  நாளை மாலை 6 மணிக்கு மேல் சூழலுக்கேற்ப மீண்டும் பேருந்துகள் இயக்கம் குறித்து முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web