சோகம்... ரயில் சக்கரங்கள் ஏறியதில் கால் துண்டா கல்லூரி மாணவர்!!

 
நேதாஜி

மதுராந்தகம் வன்னியர்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் மூர்த்தி . இவரின் மகன் 19 வயது  நேதாஜி. இவர்  தாம்பரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். தாம்பரத்தில் உள்ள கல்லூரிக்கு தினமும்  மதுராந்தகத்தில் இருந்து  மின்சார ரயிலில்  சென்று வருவார் நேதாஜி.நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு செல்ல மதுராந்தகம் ரயில் நிலையத்திற்கு சென்றார் நேதாஜி. அப்போது சென்னை நோக்கி செல்லும் விழுப்புரம் பயணிகள் ரயில் புறப்படத் தயாராக இருந்தது.  இதனால் மாணவர் நேதாஜி ஓடிச்சென்று ரயில் பெட்டியில் ஏற முயற்சித்துள்ளார்.

ரயில் சக்கரம்

  ரயிலில் ஏற முடியாமல் கால் தவறி கீழே விழுந்துவிட்டார்.  இதனால் தண்டவாளத்திற்கும் ரயில் பெட்டிக்கும் இடையே நேதாஜி சிக்கிக்கொண்டார்.இதனையடுத்து அவரது கால்களில் ரயில் பெட்டியின் சக்கரங்கள் அடுத்தடுத்து ஏறி இறங்கின. நேதாஜியின் 2  கால்களும் முழுவதுமாக நசுங்கி துண்டானது. ப்ளாட்பாரத்தில் நின்றவர்கள், ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும்  அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

ஆம்புலன்ஸ்

இதனையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த மாணவர் நேதாஜியை மீட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம்  குறித்து  ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web