பால் குடிக்க முடியாதவங்களுக்கு கால்சியம் நிறைந்த உணவுகள்!
எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து அவசியம். ஆனால், சிலருக்கு பால் அல்லது பால் சார்ந்த உணவுகளுக்கு ஒவ்வாமை இருப்பதால், அவர்கள் கால்சியம் சத்தைப் பெற முடியாமல் போகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு பாலை தவிர்த்து, தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய பல இயற்கை உணவுகள் மூலம் போதுமான கால்சியம் சத்தைப் பெறலாம்.

சியா விதைகள் கால்சியம் நிறைந்த சிறந்த உணவுகளில் ஒன்று. இரண்டு டேபிள்ஸ்பூன் சியா விதைகளில் சுமார் 179 மி.கி கால்சியம் உள்ளது. மேலும், இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. இதனை தயிர், ஓட்ஸ் அல்லது ஸ்மூத்தி போன்றவற்றில் சேர்த்துச் சாப்பிடலாம். அதேபோல், 100 கிராம் பாதாம் பருப்பில் 264 மி.கி கால்சியம் சத்து உள்ளது. இது இருதய ஆரோக்கியத்திற்கும் மூளை செயல்பாடுகளுக்கும் நல்லது. தினமும் சில பாதாம் பருப்புகளை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அளவு கால்சியம் கிடைக்கும்.

எள்ளும் டோஃபுவும் சிறந்த தாவர அடிப்படையிலான கால்சியம் மூலங்களாகும். ஒரு டேபிள்ஸ்பூன் எள்ளில் 88 மி.கி கால்சியம் சத்து உள்ளது. இதனை சாலட்கள், பொரியல் போன்றவற்றில் சேர்த்தால் சுவையும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். டோஃபுவில் அரை கப்பிற்கு சுமார் 350 மி.கி கால்சியம் உள்ளது. இதனை வறுத்தோ அல்லது கறி வகைகளில் சேர்த்தோ சாப்பிடலாம். அதேபோல், ஒரு கப் அத்திப்பழத்தில் 241 மி.கி கால்சியம் சத்து காணப்படுகிறது. இதனை சிற்றுண்டியாகவும், ஸ்மூத்தி வடிவிலும் எடுத்துக் கொள்ளலாம். பால் பொருட்கள் தவிர்க்கும் நபர்களுக்கு இவை அனைத்தும் சிறந்த மாற்று வழியாக இருக்கும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
