அமலுக்கு வந்தது... விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு.. முழு லிஸ்ட்!
இன்று அக்டோபர் 1ம் தேதி புதன்கிழமை அஞ்சல் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை நிறுத்தப்படுவதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது. அத்துடன் விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டண உயா்வு நடைமுறைக்கு வருகிறது.
இது குறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் அஞ்சல் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை நிறுத்தப்பட்டு விரைவு அஞ்சல் சேவையுடன் இணைக்கப்பட்டு, அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன் காரணமாக , விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆவணங்களுக்கு அதிகபட்சம், 50 கிராமுக்கு உள்ளூருக்கு ரூ. 19,
200 கி.மீ.-க்கு ரூ. 47,
201 கி.மீ. முதல் 2,000 கி.மீ. வரை ரூ. 47,
51 கிராமில் இருந்து 250 கிராம் வரை உள்ளூருக்கு ரூ. 24,
200 கி.மீ. வரை ரூ. 59 ,
201 கி.மீ. முதல் 500 கி.மீ. வரை
ரூ.63, 501 கி.மீ. முதல் 1,000 கி.மீ. வரை
ரூ.68, 1,001 கி.மீ. முதல் 2,000 கி.மீ. வரை
ரூ. 72, 2,000 கி.மீ.க்கு மேல் ரூ. 77,
251 கிராமில் இருந்து 500 கிராம் வரை
உள்ளூருக்கு ரூ. 28, 200 கி.மீ.-க்குள் ரூ.70,
201 கி.மீ. முதல் 500 கி.மீ. வரை ரூ. 75,
501 கி.மீ. முதல் 1,000 கி.மீ. வரை ரூ. 82

1,001 கி.மீ. முதல் 2,000 கி.மீ. வரை ரூ.86, 2,000 கி.மீ.-க்கு மேல் ரூ.93 கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட கட்டணங்கள், புதன்கிழமை இன்று அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
