டிகிரி முடித்தவர்களுக்கு தேர்வே இல்லாமல் கனரா வங்கியில் வேலைவாய்ப்பு... முழு விபரம்!
இளங்கலை டிகிரி முடித்தவர்களுக்கு கனரா வங்கியின் துணை நிறுவனமான கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் (Canara Bank Securities Limited) பல்வேறு Trainee (Administration/Office Work) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த பணிக்கான விண்ணப்பங்கள் வரும் அக்டோபர் 17ம் தெதிக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும். தேர்வு இல்லாமல், நேர்காணல் மூலம் மட்டும் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பணியிடம்: பெங்களூர், மும்பை
சம்பளம்: மாதம் ரூ.22,000 (அடிப்படை ஊதியம்)
வயது வரம்பு: 20 முதல் 30 வயது வரை
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (குறைந்தது 50% மதிப்பெண்). புதிதாக பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: மின்னஞ்சல் மூலம் – [www.canmoney.in/careers](http://www.canmoney.in/careers) என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் 17/10/2025 மாலை 6 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. தேர்வு நேர்காணல் வழியாக மட்டுமே நடைபெறும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வங்கி விதிகளின்படி கூடுதல் சலுகைகளும் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் தேதி மற்றும் நேரம் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
முக்கிய குறிப்பு: தவறான தகவல் அல்லது முழுமையற்ற ஆவணங்கள் சமர்ப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். கடைசி தேதிக்குப் பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
