டிகிரி முடித்தவர்களுக்கு கனரா வங்கியில் 3,500 பணியிடங்கள்.. முழு விபரம்!
கனரா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு 3,500 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். என்பது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணி இடங்கள்: 3,500 (அப்ரண்டீஸ் பயிற்சி பணி). தமிழ்நாட்டில் 394 இடங்கள்.
பயிற்சி காலம்: ஒரு ஆண்டு
கல்வி தகுதி: 1-9-2025 அன்றைய தேதிப்படி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. 1-1-2022-க்கு முன்போ, 1-9-2025-க்கு பின்போ பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருக்கக்கூடாது.

வயது: 1-9-2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 20; அதிகபட்ச வயது 28. 1-9-1997-க்கு முன்போ, 1-9-2005-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
உதவித்தொகை: மாதம் ரூ.15,000
தேர்வு முறை: உள்ளூர் மொழி அறிவு திறன் தேர்வு, ஷார்ட்லிஸ்ட்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-10-2025
இணையதள முகவரி: https://canarabank.bank.in/pages/Engagement-of-Graduate-Apprentice-in-Canara-Bank-under-Apprenticeship
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
