#FACT CHECK: ஏடிஎம்மில் இதை செய்தால் திருட்டிலிருந்து தப்பிக்கலாம்!? உண்மை என்ன?!

 
ஏடிஎம்

ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் போது ‘கேன்சல்’ பொத்தானை இரண்டு முறை அழுத்தினால் கார்டு திருட்டைத் தடுக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் தவறானது என மத்திய அரசின் உண்மைச் சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.

வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து கார்டு எண்கள், பின் நம்பர் போன்றவற்றை கேட்டு பல்வேறு ஏமாற்று வழிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் முன் ‘கேன்சல்’ பொத்தானை இருமுறை அழுத்த வேண்டும் என கூறி, இது ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல் என சில செய்திகள் பரவியுள்ளன. ஆனால், “அத்தகைய அறிவிப்பு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை, இது போலியான தகவல்” என்று மத்திய அரசின் ப்ரஸ் இன்பர்மேஷன் ப்யூரோ (PIB) தன் ‘Fact Check’ பிரிவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஏடிஎம்

வங்கிகள் கூறியுள்ளதாவது – ‘கேன்சல்’ பொத்தானை பயன்படுத்துவது, நீங்கள் தவறான உள்ளீடு செய்தால் அல்லது பரிவர்த்தனையை நிறுத்த விரும்பினால் மட்டுமே பயன்படும். இது ஏடிஎம் திருட்டைத் தடுக்காது. ஆனால் பரிவர்த்தனை முடிந்ததா என்பதை உறுதிப்படுத்த ஒருமுறை ‘கேன்சல்’ அழுத்துவது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏடிஎம் கார்டு பாதுகாப்புக்கான முக்கிய ஆலோசனைகள்:

ஏடிஎம்

  • கார்டு நம்பர், பின் நம்பரை யாருக்கும் சொல்ல வேண்டாம்.

  • பின் நம்பரை உள்ளிடும்போது கீபேட்டை கைகளால் மறைக்கவும்.

  • கார்டின் பின்புறத்தில் பின் நம்பரை எழுத வேண்டாம்.

  • யாரிடமும் கார்டை ஒப்படைக்காதீர்கள்.

  • ஏடிஎம் கீபேடு, கார்டு ஸ்வைப் இடத்தில் சந்தேகப்படும் பொருள்கள் உள்ளனவா என சரிபார்க்கவும்.

  • பணம் எடுத்தவுடன் ‘கேன்சல்’ பொத்தானை அழுத்தி பரிவர்த்தனை முடிந்ததா என உறுதி செய்யவும்.

  • தெரியாத பணப்பரிமாற்றங்கள் நடந்தால் உடனடியாக வங்கி மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.

அதனால், ‘கேன்சல்’ பொத்தானை இருமுறை அழுத்துவது ஏடிஎம் மோசடியைத் தடுக்க உதவும் என்ற கூற்று முழுமையாக தவறானது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!