கவனமா இருங்க மக்களே... 219 மருந்து நிறுவனங்களின் விற்பனை உரிமம் ரத்து... !

 
மருந்து

தமிழக மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம்  மாநிலம் முழுவதும் உள்ள மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களில் அவ்வப்போது  ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.  இதன் பயனாக கடந்த 9 மாதங்களில் விதியை மீறி செயல்பட்டு வந்த    219 மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களின்   உரிமங்கள்   ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 381 மருந்து விற்பனையாளர்கள் மீது  வழக்கு தொடரப்பட்டுள்ளது.


மேலும்  தரமற்ற மருந்துகளை விற்பனை செய்து வந்த  21 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் போதை  பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை, விநியோகம் செய்த 9 மருந்து விற்பனை மையத்தின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மாத்திரை மருந்து


இதே போல் இனி தொடர்ச்சியான இடைவெளியில்   திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். போதை மருந்துகள்,  மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்யப்படும் மருந்துகள் இவைகளை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web