இந்த 4 மாவட்டங்களில் கேன்சர் பாதிப்புக்கள் அதிகம்... அமைச்சர் அதிர்ச்சி தகவல்!

 
கேன்சர்

 தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர்   மா. சுப்பிரமணியன் அதிர்ச்சி தரும் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது 18 வயது நிரம்பிய அனைவரும் கண்டிப்பாக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அமைச்சர் சேலத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில்  “ சமீபகாலமாக உலகம் முழுவதும் கேன்சர் பாதிப்பு என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.  

புற்றுநோய்

தமிழகத்தைப் பொறுத்தவரை ராணிப்பேட்டை, கன்னியாகுமரி (நாகர்கோவில்), திருப்பத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் கேன்சர் பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக தெரிகிறது. இந்த மாவட்டங்களில் கடந்த வருடம் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

புற்றுநோய்

இதேபோன்று தமிழகத்தில் உள்ள மற்ற  38 மாவட்டங்களிலும் இந்த வருடம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. மேலும் ஆரம்ப காலத்திலேயே புற்றுநோயை கண்டறிந்தால் அவர்களை 100% காப்பாற்ற வாய்ப்புக்கள் அதிகம்” எனப் பேசியுள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web