கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை... வடமாநிலத்தைச் சேர்ந்தவர் கைது!
கோவை கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த ஒடிசா மாநிலத்தைச் சார்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, பெரிய நாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் கீரணத்தம் அருகே சோதனை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சய்குமார் சமல்(40) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ1,14,400/- மதிப்புள்ள சுமார் 34 கிலோ கிராம் கஞ்சா சாக்லேட்டை போலீசார் பறிமுதல் செய்து, அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!