கஞ்சா விற்பனை.. போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய பாஜக நிர்வாகி!

 
குணசேகரன்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் கையில் பையுடன் சுற்றி திரிந்தனர். இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர்கள் வைத்திருந்த பையில் நான்கு கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

உடனே போலீசார் அவர்களை பிடித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து ஓட்டேரி காவல் ஆய்வாளர் நடத்திய விசாரணையில் பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்டச் செயலர் குணசேகரன், ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனைக்குக் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

கஞ்சா

இதையடுத்து பா.ஜனதா மேற்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குணசேகரன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ​​அவரது வீட்டில் இருந்த கஞ்சா மற்றும் எடை இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!