3 நாட்களுக்கு ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்த முடியாது... இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க...

 
மின்கட்டணம்

மின்கட்டணம் செலுத்த முன்பெல்லாம் வரிசையில் காத்து கிடந்து நம் முறை வரும் போது சில்லறையா கொண்டு வரக்கூடாதா என திட்டு வாங்கி ஒரு வழியாக கட்டி முடித்து வீடு திரும்புவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். தற்போது மின்வாரியத்தில்   தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. உள்ளங்கையில் உலகம்   என்பதற்கு ஏற்ப எல்லாமே கையில் இருக்கும் மொபைல் மூலமே செய்து விடலாம் என்ற நிலை உருவாகிவிட்டது.  

மின்கட்டணம்

குறிப்பாக கூகுள் பே, பேடிஎம் என இணையதளத்தில் கட்டணம் செலுத்தும் முறையானது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மின் கட்டணம் செலுத்த வரிசையில் நீண்ட நேரம் நின்று காத்திருப்பதற்கு பதிலாக ஒரே நிமிடத்தில் மின் கட்டணம் செலுத்தும் திட்டத்தை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.  இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில்  தற்போது R-APDRP IT அப்ளிகேஷனில்   அனைத்து வாடிக்கையாளர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.  இதனை மேம்படுத்த கர்நாடக மாநில மின்சாரத்துறை முக்கிய முடிவு எடுத்துள்ளது. அதன் படி ஹெச்.எஸ்.ஆர் லே அவுட்டில் உள்ள மின்சாரத்துறையின் மத்திய சர்வருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக  அதாவது நவம்பர் 24  வெள்ளிக்கிழமை முதல்  நவம்பர் 26 வரை ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியாது எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மின்கட்டணம்


இதனால் மின்கட்டணங்களை செலுத்த முடியாமல் வாடிக்கையாளர்கள் சிரமங்களை சந்திக்க வேண்டி வரலாம்.  பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மின் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், மொபைல் ஆப், Third Party ஆப் அனைத்திலும்  நவம்பர் 27ம் தேதியில் இருந்து இயல்பு நிலை திரும்பிவிடும். மின்கட்டணம் செலுத்த வேண்டிய வாடிக்கையாளர்கள் அனைவரும்   அதற்கு பின்பாக வாடிக்கையாளர்கள் ஆன்லைன் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என கர்நாடக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web