தனியார் பேருந்தில் மோதி அப்பளமாக நொறுங்கிய கார்!!

காரைக்காலில் வசித்து வருபவர்கள் கார்த்திகேயன் சாவித்திரி தம்பதியர். இவர்கள் மன்னார்குடியில் உறவினர் வீட்டில் நடந்த கறிவிருந்துக்காக காரில் சென்றனர். காரை கார்த்திகேயன் ஓட்டிச் சென்றார். திருவாரூர்- மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் காக்கா கோட்டூருக்கு அருகே சென்ற போது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதே நேரத்தில் அந்த வழியாக மயிலாடுதுறைக்கு வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. கார் மற்றும் பேருந்தில் இருந்தவர்களின் கூக்குரல் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் தம்பதிகள் உயிர் தப்பினர்.பேருந்தில் வந்தவர்களுக்கு எவ்வித காயங்களும் இல்லை.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர். அத்துடன் சாலையில் போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!