டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்து ... 3 பேர் பலி!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஏற்பட்ட துயரமான சாலை விபத்தில், காரில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற டேங்கர் லாரி, வெள்ளிக்கிழமை காலை உளுந்தூர்பேட்டை–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செம்பியமாதேவி மேம்பாலம் வழியாகச் சென்றுகொண்டிருந்தது.

அந்த நேரத்தில் லாரி ஓட்டுநர் திடீரென வாகனத்தின் திசையை மாற்றியபோது, அதே திசையில் பின்னால் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் இருந்த இரு பெண்கள் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் அடையாளம் இதுவரை தெரியவில்லை. தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
