ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞர்... துண்டான கையை மற்றொரு கையில் எடுத்து சென்ற அவலம்!!

 
துண்டான கை

பீகார் மாநிலத்தில் வசித்து வருபவர் சுமன்குமார். இளைஞரான இவர் வழக்கமான ரயில் பயணித்தில் கீழே விழுந்துவிட்டார். கீழே திடீரென விழுந்ததில் அவரது கை துண்டானது. துண்டான கையை  மற்றொரு கையில் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு நடக்க தொடங்கினார். பீகார் மாநிலம் பாகல்பூர் சுல்தாங்கஞ்ச் பகுதியில் அவர் கையுடன் சாலையில் நடந்து சென்றார்.  அதனைப் பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

துண்டான கை

இதையடுத்து அங்கிருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.  மேலும் சிலர் அந்த காட்சியை மொபைலில் புகைப்படங்கள் வீடியோக்களாக எடுத்து பதிவிட்டனர். தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை  அந்த இளைஞரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.  

போலீஸ்


அவர் ரயிலில் பயணித்த போது, கீழே விழுந்ததில் ஒரு கை துண்டானதாகவும், அந்தக் கையை மீண்டும் இணைப்பதற்காக மருத்துவமனையைத் தேடிச் சென்றதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்தார். போலீசார் அவரை உடனே  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இளைஞரின் செயலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web