நேருக்கு நேர் கார்கள் மோதி கோர விபத்து; 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

 
கார் விபத்து

அரியானா மாநிலம் குருஷேத்ரா மாவட்டத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்திற்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து  குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து

அரியானா மாநிலம் குருஷேத்ரா மாவட்டம் அம்பாலா புப்கா கிராமத்தை சேர்ந்தவர் ரிஷிபால். இவரின் மனைவியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் என 6 பேர் ஒரு காரில் முலானாவு என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.

இவர்களது கார் கரார்சி கிராமம் அருகே சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த மற்றொரு கார் நேருக்கு நேராக மோதியது. இதில் எதிரே வந்த காரில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ரிஷிபாலின் காரில் இருந்த 5 பேர் காயமடைந்தனர்.

விபத்து

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி பலியானவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?