நடிகை ராக்கி சாவந்த், முன்னாள் கணவர் மீதான வழக்குகள் ரத்து... உயர்நீதிமன்றம் உத்தரவு!
பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் மற்றும் அவரது முன்னாள் கணவர் அடில் துரானி மீதான வழக்குகளை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ராக்கி சாவந்த் மற்றும் அடில் துரானி, கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த ஆண்டு பிரிந்தனர். பின்னர், ராக்கி சாவந்த் தனது முன்னாள் கணவர் மீது குற்றவியல் மிரட்டல், துன்புறுத்தல் மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து அடில் துரானியும் ராக்கி சாவந்த் தன்னை ஆபாச வீடியோ வழியாக அவதூறு செய்ததாக எதிர்வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்குகள் குறித்து நேற்று மும்பை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ரேவதி மோகிதே தேரே மற்றும் சந்தோஷ் பாட்டீல் தலைமையிலான அமர்வில் விசாரணை நடந்தது. அப்போது இருவரும் நேரில் ஆஜராகி, தங்களுக்கு இடையேயான பிரச்சினைகள் பேசித்தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், வழக்குகளை தொடர வேண்டாம் எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “இருவரும் இணக்கமாக தீர்வை கண்டுள்ளதால் வழக்குகளை நிலுவையில் வைத்திருக்க தேவையில்லை” எனக் குறிப்பிட்டு, இருவர்மீதான வழக்குகள் மற்றும் குற்றப்பத்திரிகைகளை ரத்து செய்ய உத்தரவிட்டனர்.இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, இருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை அமைதியாகத் தொடர விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
