செம... இ சேவை மையம் மூலம் பணம் எடுக்கும் வசதி?

 
இ சேவை மையம்

அரசின் மூலம் பெற வேண்டிய சான்றிதழ்களை இ சேவை மையத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இந்த இ.சேவை மையங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக விரைவில் தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாக   தகவல் வெளியாகியுள்ளது.

இ சேவை மையம்

அதன்படி, இ சேவை மையங்களை DigiPay வரம்பிற்குள் கொண்டுவந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.   இதன் மூலம் இ-சேவை மையங்களில் ஆதார் பயோமெட்ரிக் வாயிலாக வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கலாம் எனக்  கூறப்படுகிறது.

தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் இ-சேவை மையம்!! அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள  அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலக பகுதிகளிலும், கிராமப்புற பகுதிகளிலும் தமிழக அரசின் பொது இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த இ-சேவை மையங்கள் மூலம், அரசு சார்ந்த பல சான்றிதழ்கள் எடுத்தல், ஆதார்   கார்டுகள் திருத்தம் செய்தல் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்கனவே செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை