9ம் வகுப்பு மாணவர்களுக்கு 'டேட்டிங்' பாடம் - CBSE விளக்கம் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 'டேட்டிங்' பாடம் - CBSE விளக்கம் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 'டேட்டிங்' பாடம்... CBSE விளக்கம்...!
கல்வி பாடத்திட்டத்தில் ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறையும் பாடங்கள் பரிசீலிக்கப்பட்டு அவை திருத்தி அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போதைய 9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் டேட்டிங் மற்றும் உறவுகள் என்ற தலைப்பில் பாடம் இடம் பெற்றதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.
அதில் ”சி.பி.எஸ்.இ. 9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் டேட்டிங் மற்றும் உறவுகள் என்ற தலைப்பில் பாடம் இடம் பெற்றதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வேகமாக பரவி வருகிறது. இதற்கு சில தரப்பில் இருந்து எதிர்ப்புகளும், சில தரப்பில் இருந்து ஆதரவுகளும் பெருகி வருகின்றன. இந்த இளம் வயதில் இதுபோன்ற பாடங்களை கொடுத்து அவர்களின் உணர்வுகளை தூண்டவோ, கலைக்கவோ வேண்டாம் அது அவசியமில்லை என்கின்றனர். மேலும் சிலர் பாடப்பிரிவில் நவீன காலத்தில் இளம்பருவத்தினர் இடையே ஏற்படும் காதல் மற்றும் இணைய நட்பு, இணையதள காதல், சீண்டல் இவைகளை விளக்கமாக மாணவர்களுக்கு புரியும் வகையில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது. இந்த தகவல்கள் அனைத்தும் ககன்தீப் கவுர் எழுதிய ‘‘சுய விழிப்புணர்வு மற்றும் அதிகாரம் அளிப்பதற்கான வழிகாட்டி’’ என்ற புத்தகத்தில் இருந்து பகிரப்பட்டுள்ளது. இதை சி.பி.எஸ்.இ. வெளியிடவில்லை. அதேபோல், எந்த ஒரு தனியார் பதிப்பகத்தின் புத்தகங்களையும் சி.பி.எஸ்.இ. பரிந்துரை செய்யவும் இல்லை “ எனக் குறிப்பிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த தகவலுக்கு சி.பி.எஸ்.இ. நேற்று விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க