பகீர் சிசிடிவி வைரல்.. சர்வீஸ் செய்து கொண்டிருக்கும் போதே பயங்கரமாக வெடித்த செல்போன்..!
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாராபுரம் சாலையில் சபரிகிரி என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று (பிப்ரவரி 3) வாடிக்கையாளர் ஒருவர் தனது கடைக்கு சர்வீஸ் செய்வதற்காக செல்போனை கொண்டு வந்துள்ளார். செல்போனை சர்வீஸ் செய்து கொண்டிருந்த போது, திடீரென செல்போன் வெடித்ததால் சபரிகிரி அலறியடித்துக்கொண்டு கடையை விட்டு வெளியே ஓடினார்.
பழனியில் செல்போன் வெடித்து சிதறி்ய சிசிடிவி காட்சி....! pic.twitter.com/vvRnsNjkPR
— Dina Maalai (@DinaMaalai) February 6, 2024
மேலும், கடையில் செல்போன் திடீரென வெடித்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இந்த காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், சில செல்போன் பழுதுபார்க்கும் நிபுணர்கள், வீங்கிய செல்போன்களை அருகில் வைக்கக் கூடாது என்கின்றனர்.
ஏனெனில் வெடிப்பு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். எனவே, உடனடியாக பேட்டரியை மாற்ற அறிவுறுத்தியுள்ளனர். தற்போது, தொடரும் செல்போன் வெடிப்புகள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க