செல்போன் மோகத்தால் நேர்ந்த கொடூரம்: மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற மெக்கானிக்!

 
celphone celphone

புதுச்சேரி ஜீவானந்தபுரம் பகுதியில் செல்போன் பயன்பாட்டால் ஏற்பட்ட தகராறில், மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய கணவனைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம் மரக்காணத்தைச் சேர்ந்த மெக்கானிக் ஏழுமலைக்கும் (24), சுவேதா (21) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

ஆபாசம் பாலியல் சிசிடிவி செல்போன் பாலியல் மிரட்டல்

சுவேதா அடிக்கடி செல்போனில் பேசுவது குறித்து ஏழுமலைக்கு நீண்ட நாட்களாகச் சந்தேகம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஏழுமலை முதலில் செல்போன் சார்ஜர் வயரால் சுவேதாவின் கழுத்தை இறுக்கியுள்ளார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

ஆம்புலன்ஸ்

சுவேதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய ஏழுமலையைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தால் விளைந்த இந்த விபரீத முடிவு, ஒரு பிஞ்சு குழந்தையைத் தாயில்லாமல் தவிக்கவிட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை