அசத்தல்.... உலகின் மிக நீண்ட தலைமுடியுடன் சிறுவன் கின்னஸ் சாதனை !!

 
சாஹல்

கின்னஸ் சாதனைக்காக பல்வேறு வகையினரும் பல்வேறு தரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் 15 சிறுவன் ஒருவன் தலைமுடியை நீளமாக வளர்த்து சாதனை படைத்துள்ளார். இவரது சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரில் வசித்து வரும்   சிறுவன் சிடக்தீப் சிங் சாஹல் . இவருக்கு வயது 15. சாஹலுக்கு  சிறு வயது முதலே சாஹலுக்கு நீண்ட தலைமுடிதான். இதனால் சாஹலுக்கும் பெரும் வருத்தம். இதனை அடிக்கடி பெற்றோரிடம் கூறி நச்சரித்துக் கொண்டே இருப்பார்.


ஆனால் வளர்ந்ததும், அதன்மீது தனி கவனம் செலுத்த தொடங்கினார். தலைமுடி தன்னில் ஒரு பகுதி என்ற உணர்வு சாஹலுக்கு ஏற்பட்டது. சீக்கிய மதத்தினரான   சாஹல், மத நம்பிக்கைகளுக்கு கவுரவம் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒருபோதும் தலைமுடியை வெட்டியதில்லை. தற்போது  சாஹலின் தலைமுடி  146 செ.மீ. அதாவது 4 அடி 9.5 அங்குலம் அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்நிலையில், சாஹலின் நீண்ட தலைமுடியானது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.  இதுகுறித்த  வீடியோவை கின்னஸ் உலக சாதனை அமைப்பு வெளியிட்டு உள்ளது. இதில் சாஹல், தன்னுடைய தலைமுடி பராமரிப்பு குறித்து சிலாகித்து  பேசியுள்ளார். தலைமுடியை அலசி, சுத்தம் செய்து, எப்படி தலைமுடியை வாருவது என்பது குறித்து தன் தாயாரின் உதவியுடன் பேசுகிறார்.

சாஹல்

தாய் மட்டும்தனக்கு உதவி செய்யவில்லை எனில் ஒரு நாள் முழுவதும் தலைமுடியுடனே நேரம் செலவிட வேண்டியிருக்கும்   என சாஹல் கூறுகிறார்.  தலைமுடியை அலசாமல் அல்லது காய வைக்காமல் இருக்கும்போது, சீக்கிய முறைப்படி அதனை உருண்டையாக சுற்றி வைத்து, டர்பன் அணிந்து கொள்கிறார். இந்த சாதனையை பற்றி மற்றவர்களிடம் பேசும் போது யாரும் நம்பவில்லை.   நான் பொய் கூறுகிறேன் என நினைத்து விட்டனர். அதன்பின்பு, அவர்களை நம்ப வைப்பதற்காக என்னுடைய  சில சான்றுகளைக் காட்டினேன் எனக் கூறுகிறார். கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்  தன்னுடைய சாதனையும் ஒரு பகுதியாக இருப்பதற்கு  சாஹல்   மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web