அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யகூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று செப்டம்பர் 5ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் எனவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த மழை செப்டம்பர் 8ம் தேதி வரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை தென் கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
இதனையடுத்து மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாகவும், இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது பருவமழையை உருவாக்கும் காரணியாக இருக்கலாம். இதனால் தமிழகத்தில் சில இடங்களில் மழை தொடரும் எனவும், கடலோர பகுதிகளில் மாலை நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!