தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு ... வங்கக்கடலில் காற்றழுத்த புதிய தாழ்வு !
வங்கக்கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமாகி, பின்னர் வலு குறைந்து சாதாரண தாழ்வாக மாறியுள்ளது. இதனால் எதிர்பார்த்தபடி மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்யவில்லை. வலுப்பெற வேண்டிய அமைப்பு பலவீனமடைந்த நிலையில், தற்போது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது.

இந்த புதிய தாழ்வு தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால், தமிழகத்தில் சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், இன்று பிற்பகல் ஒரு மணி வரை தமிழகத்தின் 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகியவை அடங்கும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
