நாளை விண்ணில் பாயத் தயாராகும் சந்திராயன் 3!!

 
சந்திராயன் ஸ்ரீஹரிகோட்டா

நாளை ஜூலை 14ம் தேதி வெள்ளிக்கிழமை சந்திராயன் 3 விண்கலம்  நிலவுக்கு ஏவப்பட உள்ள நிலையில் விஞ்ஞானிகள் குழுவினர் திருப்பதி கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தனர். விண்கலத்தின் மினியேச்சர் வடிவத்தை கொண்டு வந்து விஞ்ஞானிகள் இறைவனின் பாதத்தில் வைத்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட வேண்டும் என வேண்டிக் கொண்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகிவருகிறது.இதற்காக இன்று பகல் 1 மணிக்கு 26 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்க உள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவுவதற்கு தயார் நிலையில் இருக்கிறது சந்திராயன் 3.  ஸ்ரீஹரி கோட்டாவில் சதீஷ் தவான் ஏவுதளத்தில் ஜூலை 14 ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் பாய சந்திராயன் 3 விண்கலம் தயார் நிலையில் இருப்பதாகவும் இதற்கான கவுண்டவுன் ஆரம்பித்து விட்டதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.சந்திராயன் 3, மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் எனவும்  நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்படுகிறது. முதலில் ஜூலை 13ம் தேதி ஏவப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது 14 ம் தேதி ஏவப்பட இருப்பதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


சந்திராயன் 3 பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வு செய்வதில் பெரும் பங்கு வகிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  2008, அக்டோபர் 22ல் விண்ணில் ஏவப்பட்ட   'சந்திரயான்-1'   உலக நாடுகளை ஆச்சரியத்தில் தள்ளியது.  நிலவில் செய்த ஆய்வில் அங்கு தண்ணீர் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டது.  

2019, ஜூலை 22ல் சந்திரயான்-2 விண்கலம் நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  எனினும், தென் துருவத்தில் விக்ரம் லேண்டரின் மெதுவான தரையிறக்கம்  பெரும் சவாலாக மாறியது. சந்திரயான் 2 கடைசி கட்டத்தில் நிலவில் இறங்கும் போது அதன் கட்டுப்பாட்டை இழந்து நிலவுடன் மோதியதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர், பூமியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.  

சந்திராயன் ஸ்ரீஹரிகோட்டா

சந்திரயான் 2 பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. நமது விஞ்ஞானிகள் தோல்வியில் துவண்டு விடாமல் தொடர்ந்து ரூ.615 கோடி செலவில் சந்திரயான் 3 திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.  43.5 மீட்டர் நீளமும், 640 டன் எடையுடன்   திட, திரவ, கிரையோஜெனிக் என 3 நிலைகளில் உள்ள எரிபொருட்களின்  உதவியால் ராக்கெட் விண்ணில் பாயும். மார்க்-3 ராக்கெட்டின் அனைத்து பரிசோதனைகளும் நிறைவு பெற்று விண்ணில் பாய தயார் நிலையில் உள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜூலை முழுவதுமே அதிர்ஷ்டம் தான்!

From around the web